ஏமாந்துடாதீங்க.. மக்களே… AC வாங்கும் போது கவனிக்க வேண்டிய 6 விடயம்!

Best AC Choosing Tips Buying Guide : புது AC வாங்கும் போது கேட்க வேண்டிய 6 விடயங்கள் 

Best AC Choosing Tips Buying Guide : புது AC வாங்கும் போது கேட்க வேண்டிய 6 விடயங்கள் 

கொளுத்தும் வெயிலுக்கு பேசாம ஒரு ஏசி (AC) வாங்கி வீட்டுல மாட்டிடலாமா என்கிற யோசனை உங்களுக்குள் ஓடிக்கொண்டு இருந்தால்.. கம்பெனி மற்றும் அதன் விலையை பொருட்படுத்தாமல்.. ஏசியை வாங்கினாலும் சரி அதைப்பற்றி கட்டாயம் கேட்டு விசாரிக்க வேண்டிய 6 முக்கியமான விடயங்களை இப்போது பார்க்கலாம்.

Best AC Choosing Tips Buying Guide : புது AC வாங்கும் போது கேட்க வேண்டிய 6 விடயங்கள் 

ஸ்டார் ரேட்டிங்:

நீங்கள் வாங்கும் ஏசியின் ஸ்டார் ரேட்டிங் என்னவென்பதை பார்த்தோ அல்லது கேட்டோ தெரிந்துகொள்ளவும். குறைந்தபட்சம் 3-ஸ்டார் ரேட்டிங் இருக்க வேண்டும். ஒருவேளை உங்கள் பட்ஜெட் கொஞ்சம் அதிகமாக இருந்தால் 5-ஸ்டார் ரேட்டிங் உள்ள ஏசியை வாங்கவும்.

அதிக ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசியானது அதிக ஆற்றல் திறன் (Energy Efficient) கொண்ட ஏசியாக இருக்கும். மேலும் அதிக ஸ்டார் ரேட்டிங் உள்ள ஏசிகள் நீண்ட காலத்திற்கு உங்கள் வீட்டின் மின் கட்டணத்தை சேமிக்கவும் உதவும்.

Best AC Choosing Tips Buying Guide : புது AC வாங்கும் போது கேட்க வேண்டிய 6 விடயங்கள் 

காப்பர் கம்ப்ரஸர்

புதிய ஏசி வாங்கும் போது அதில் சரியான கம்ப்ரஸர் (Compressor) இருப்பதை உறுதி செய்யவும். அதில் காப்பர் கம்ப்ரஸர் இருந்தால் சிறப்பு. ஏனென்றால் காப்பர் கம்ப்ரஸர் மிகவும் நம்பகமான கம்ப்ரஸராகும், மேலும் அவைகள் நீடித்தும் உழைக்கும்.

காப்பர் கம்ப்ரஸர் உடன் வரும் ஏசியின் விலையானது சாதாரண கம்ப்ரஸர் உடன் ஏசியை விட சற்று அதிகமாக இருக்கும் தான். ஆனால் அது ஒப்பீட்டளவில் மிகவும் திறமையாக செயல்படும். வருங்காலத்தில் ஏற்படும் ஏசி ரிப்பர் தொடர்பான செலவுகளை தடுக்கும் அல்லது குறைக்கும்.

புது AC வாங்கும் போது கேட்க வேண்டிய 6 விடயங்கள் 
Best AC Choosing Tips Buying Guide

இன்வெர்ட்டர் டெக்னாலஜி

நீங்கள் வாங்கும் புதிய ஏசியில் இன்வெர்ட்டர் டெக்னாலஜி உள்ளதா என்பதை மறக்காமல் கேட்டு தெரிந்து கொள்ளவும். ஏனென்றால் ஒரு ஏசியில் கட்டாயம் இருக்க வேண்டிய மிகவும் முக்கியமான அம்சங்களில் ஒன்று.

அதிக அளவிலான மின்சாரத்தை பயன்படுத்தாமல், ஒரு அறையில் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை பராமரிக்க வேண்டுமென்றால் இன்வெர்ட்டர் ஏசிகள் தான் பெஸ்ட்.

Top 10 AdSense Optimized WordPress Themes 2023

புது AC வாங்கும் போது கேட்க வேண்டிய 6 விடயங்கள் 

ஈகோ ஃப்ரெண்ட்லி ஆர்-32 கேஸ்

புதிய ஏசி வாங்கும் போது, அது ஆர்​​-32 கேஸை பயன்படுத்துகிறதா என்பதை கேட்டு தெரிந்துகொள்ளவும். ஏனென்றால் ஆர்-32 கேஸ் ஆனது சுற்றுச்சூழலுக்கு உகந்தவை மற்றும் சுற்றுச்சூழலுக்கு குறைவான அளவிலேயே தீங்கு விளைவிக்கும்.

Best AC Choosing Tips Buying Guide : புது AC வாங்கும் போது கேட்க வேண்டிய 6 விடயங்கள் 

வாரண்டி

பெரும்பாலான ஏசிகள் 1 ஆண்டுக்கான என்டையர் ப்ராடெக்ட் வாரண்டி (Entire Product Warranty) உடன் வருகின்றன. இருப்பினும் சில பிராண்டுகள் ஏசிக்குள் இருக்கும் கம்ப்ரஸர்களுக்கு 10 ஆண்டுகள் வரையிலான உத்தரவாதத்தை வழங்குகின்றன. நீங்கள் வாங்கும் ஏசியின் கம்ப்ரஸருக்கு எத்தனை ஆண்டுகள் வாரண்டி என்பதை கேட்டு தெரிந்துகொள்ளவும்.

Best AC Choosing Tips Buying Guide : புது AC வாங்கும் போது கேட்க வேண்டிய 6 விடயங்கள் 

பொருத்தும் கட்டணங்கள்

உங்களுக்கு பிடித்த ஏசியை தேர்வு செய்ததுமே, அந்த ஏசியின் பொருத்தும் கட்டணங்கள் பற்றி மறக்காமல் விசாரிக்கவும். அதாவது அந்த ஏசியின் பொருத்தும் சேவை இலவசமாக செய்து தரப்படுமா அல்லது அதற்கென தனி கட்டணங்கள் உள்ளதா என்பதை முன்னரே விசாரித்து கொள்ளவும். இல்லையென்றால் வீணாக செலவு செய்ய வேண்டியிருக்கும்.

Author: Tech Editor
Hello friends, I am a Technical Author & Founder of Tech Tamil. I am a Journalist. I enjoy learning things related to new technology and teaching others. I request you to keep supporting us like this, and we will keep providing further information for you. :)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *